இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் சோழர்கள். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் பரம்பரையும் செய்யாத ஒன்றாய் கடல் கடந்து சென்று போரிட்டு தங்களது ஆட்சியையும் அதிகாரத்தியும் நிலை நாட்டியவர்கள் சோழர்கள். உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்கும், 2000ம் ஆண்டுகளாய் இன்றளவும் பயன்பாட்டில் உள்ள கல்லணையை கட்டியவர்கள் சோழர்கள். உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் எனும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டியவர்கள் சோழர்கள். குடவோலை முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள் சோழர்கள்.
சோழர்கள், தஞ்சையையும் காவிரியையும் ஒட்டிய பகுதிகளில் ஆண்டுவந்துள்ளனர். காவிரியின் பயனால் வளம் நிறைந்த பகுதியாக விளங்கியது சோழ நாடு. ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது பழமொழி. பெரும் வீரமும், தீரமும் நிறைந்தவர்கள் சோழ மன்னர்கள். புகழ் பெற்ற மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென் இந்தியாவில் தடுத்து நிறுத்தியவர்கள் சோழர்கள். தென் இந்தியாவிலிருந்து படை எடுத்துச் சென்று வட இந்திய மன்னர்களை வென்றவர்கள் சோழர்கள். ஆமையின் தடம் பிடித்து கடல் கடந்தும் சென்று கடாரம், ஸ்ரீவிஜயம் ஆகிய நாடுகளை வென்று தங்களது வெற்றிக்கொடியை நாட்டியவர்கள் சோழ மன்னர்கள். சோழ மன்னர்களின் கொடி புலிக்கொடி. சோழ மன்னர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.
நீண்ட வரலாறும் மங்காத புகழும் பெற்ற சோழர்களின் சரித்திரத்தை வரலாற்று ஆசிரியர்கள் முற்கால சோழர்கள், இடைக்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் என வகைப்படுத்தியுள்ளனர்.
முற்கால சோழர்கள்
இடைக்கால சோழர்கள்
மனுநீதிச் சோழன் – எல்லாளன்
குளக்கோட்டன் – சோழ கங்க தேவன்
இளஞ்சேட்சென்னி
கரிகால சோழன்
நலங்கிள்ளி மற்றும் நெடுங்கிள்ளி
பெருநற்கிள்ளி – கிள்ளிவளவன்
பிற்கால சோழர்கள்
விஜயாலய சோழன்
ஆதித்ய சோழன்
முதலாம் பராந்தக சோழன்
செம்பியன் மாதேவி
இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
இராஜாதிராஜ சோழன்
இரண்டாம் இராஜேந்திர சோழன்
வீரராஜேந்திர சோழன்
அதிராஜேந்திர சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
விக்கிரம சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் இராஜராஜ சோழன்
இரண்டாம் இராஜாதிராஜ சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் இராஜராஜ சோழன்
மூன்றாம் ராஜேந்திர சோழன்
Comments