பாண்டியர்கள் வரலாறு

இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை மற்றும் நாடகம் என்னும் முத்தமிழுக்கு சங்கம் அமைத்து வளர்த்துள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என மூன்று தமிழ்சங்கங்களை பாண்டிய மன்னர்கள் அமைத்துள்ளனர். இவற்றில் கடைச்சங்கம் தவிர மற்ற இரு சங்கங்கள் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம், குமரி நாடு அல்லது இலெமூரியா என்றழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்ததாக தமிழ் அறிஞர்களால் நம்பப்படுகிறது. . இந்தக் குமரிக்கண்டமானது கடற்கோளால் கடலில் முழ்கி விட்டதாகக் கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத மிக நீண்ட நெடிய வரலாறு பாண்டிய மன்னர் பரம்பரைக்கு உண்டு.

பாண்டிய மன்னர்கள்

முற்காலப் பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பெரும்பெயர் வழுதி

கடைச்சங்க காலப் பாண்டியர்

முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப் பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப்பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
முதலாம் நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி
மாறன் வழுதி
நல்வழுதி

குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்

இடைக்காலப் பாண்டியர்கள்

கடுங்கோன்
மாறவர்மன் அவனி சூளாமணி
செழியன் சேந்தன்
பாண்டிய மன்னன் அரிகேசரி
கோச்சடையான் ரணதீரன்
பராங்குசன்
பராந்தகன்
வரகுணப்பாண்டியன்
சீவல்லபன்
வரகுண வர்மன்
பராந்தகப் பாண்டியன்
மூன்றாம் இராஜசிம்மன்

பிற்காலப் பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரபாண்டியன் கி.பி. 946-966
வீரகேசரி கி.பி. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293

தென்காசிப் பாண்டியர்கள்


சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499
ஜடாவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
ஜடாவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான்

About the author

Comments

  1. Heya i am for the first time here. I came across this board and I find It truly useful & it helped me out much. I hope to give something back and help others like you helped me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *