காதலர் தினம்

காதலர் தினம் (Saint Valentine’s Day) Valentine’s Day உலகம் முழுவதிலுமுள்ள காதலர்கள், கணவன் மனைவி மற்றும் மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.

வேலன்டைன் நாள்

இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கத்திய ண்டுகளில் துவங்கிய கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.

வரலாறு

பத்தொன்பதாம் நூற்றாண்டுல் வாழ்த்து அட்டைகள் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் கையால் எழுதப்படும் குறிப்புகள் குறைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுல் இங்கிலாந்தில் வாலண்டைன்களை அனுப்புவது ஒரு நாகரீகமாக இருந்தது, 1847 ஆம் ஆண்டில் எஸ்தர் ஹாவ்லண்ட் தன்னுடைய வெர்ஸ்டர், மசாசூஸெட்ஸ் வீட்டில் வாலண்டைன் அட்டைகளை கையால் செய்யும் தொழிலை வெற்றிகரமாக உருவாக்கினார்.

புனித வாலண்டைன்

புனித வேலண்டைன் (இலத்தீன், Valentinus) என்பவர் பலராலும் அறியப்படும் மூன்றாம் நூற்றாண்டின் ரோம் நகரின் புனிதர் ஆவார். உலகின் பல நாடுகளில் இவரின் விழா நாளான பிப்ரவரி 14 வேலன்டைன் நாள் என இவரின் பெயரால் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் மற்றும் காதலுக்கான நாளாக கொண்டாடப்படும் வழக்கம் நடுக் காலம் முதலே உண்டு.

இவரின் பெயர் மற்றும் இவர் ரோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஃபிலாமினியாவில் பிப்ரவரி 14 அன்று கொல்லப்பட்டார் என்பதையும் தவிர இவரைப்பற்றிய வேறெந்த தகவலக்ளுக்கும் நம்பத்தகுந்த சான்றுகள் இல்லை. புனித வேலண்டைன் என்று ஒரு புனிதரா அல்லது அதே பெயரில் இரு புனிதர்கள் உள்ளனரா என்பதும் உறுதியற்றதாக உள்ளது. இவரின் வரலாற்றை எழுதிய பலர் தரும் தகவல்கள் நம்பமுடியாததாகவும் பின்னர் சேர்க்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த காரணங்களுக்காக இவரின் விழா நாள் 1969இல் திருத்தப்பட்ட உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம்பெறவில்லை. ஆனாலும் “பிப்ரவரி 14 அன்று ஃபிலாமினியாவில் வழியாக மில்வியான் பாலத்திற்கு அருகில் கொல்லப்பட்ட மறைசாட்சி வாலெண்டினுஸ்” என்னும் பட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் தனித்திருச்சபைகளின் வணக்கத்திற்கு உரியதாய் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் இவரின் பெயர் உள்ளது

வணிகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டுல் அமெரிக்காவில், தற்போது காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், பொதுவான வாழ்த்து அட்டைகளாக உள்ள பல வாலண்டைன் அட்டைகளுல் பிரபலமாக இருந்தது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொண்டாட்ட தினமான வாலண்டைன்ஸ் தினத்தில் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *