கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் கதாநாயகன், குடிப்பழக்கத்தால் அந்தப் பணியிலிருந்து மாற்றப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார். இந்நிலையில் அங்கு சமூக விரோதிகளால் சிறுவர்களை வைத்து நடத்துப்படும் போதைப் பொருள் பற்றித் விவரம் கதாநாயகனுக்குத் தெரிய வருகிறது. போதைப் பொருள் வாணிபத்தில் ஈடுபட்டுள்ள அந்த சமூகவிரோதக் கும்பலின் தலைவனை தேடிப்பிடித்து அழிக்கிறார்.
இந்தக்கதை தளபதி விஜய் நடிக்கும் `மாஸ்டர்’ படத்தின் திரைக்கதை எனச் சொல்லப்படுகிறது. இதில் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறைக் காவலராக தளபதி விஜய் நடித்திருக்கிறார். போதைப் பொருள் கடத்தலின் தலைவனாக விஜய் சேதுபதியும் அவருக்கு வலது கையாக அர்ஜுன் தாஸும் நடித்திருக்கிறார்கள்.
மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இந்தத் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தமிழ் புத்தாண்டிருக்கு முன்னர் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
தளபதி விஜய்யின் கடைசிப் படமான பிகில் வசூலில் சாதனை படைத்ததைப் போன்று மாஸ்டர் திரைப்படமும் வெற்றி பெரும் என்று கருதப்படுகிறது. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படமான “விக்ரம் வேதா” மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இதே போல் இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவராலும் பேசப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.