முதலாம் பரமேஸ்வரவர்மன்

இரண்டாம் மகேந்திரவர்மன்

புழக்கப்பெற்ற பல்லவ மன்னனும், மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றவனும், சாளுக்கியர்களின் தலைநகர் வாதாபியை எரித்து அழித்தவனும் ஆன மன்னன் நரசிம்மவர்ம பல்லவனின் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவன், பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். பல்லவ மன்னன் இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவன் மிகக்குறைவான ஆண்டுகளே பல்லவ நாட்டை ஆண்டார். கி.பி. 668ம் ஆண்டு முதல் கி.பி.672ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகள் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார். இவருக்குப் பின்னர் இவரின் மகன் முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னனாகப் பதவியேற்றான்.

முதலாம் பரமேஸ்வரவர்மன்

முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் கி.பி. 672ம் ஆண்டு முதல் கி.பி.700ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்தார். முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருந்தார். முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் காலத்தில் முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுக்கும் பல்லவப் படைகளுக்கும் தொடர்ந்து போர்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. திறமையும், வீரமும் மிக்க முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தமையால் சாளுக்கியர்களின் தொல்லைகளை திறமையுடன் கையாண்டு பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்தார்.

சமயம், கோயில்கள்

முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் சைவ சமயத்தை தழுவி சிறந்த சிவ பக்தராக விளங்கினார். சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் கட்டினார். அவற்றுள் மிக முக்கியமானது காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில் ஆகும்.

கற்றளிக் கோயில்

முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் சிறந்த சிவ பத்தன். இவன் பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினான். பல கோயில்களைப் புதுப்பித்தான். கூரம் என்ற சிற்றூரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அக்கோயிலுக்கு ‘பரமேசுவர மங்கலம்’ எனத் தன் பெயர் கொண்ட சிற்றூரை மானியமாகத் தந்தான். அங்குக் கட்டப்பட்ட கோயில் வித்யா விநீத பல்லவ-பரமேசுவர க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோயில்தான் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் கற்றளிக் கோயில் ஆகும். இவை தவிற முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

போர்கள்

முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவனின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவர். கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்யனுடன் நட்புடன் இருந்தமையால் அவனுக்குப் போரில் உதவிபுரிந்தனர். திறமையும், வீரமும் மிக்க முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் போர்களில் தேர்ந்த மன்னனாக இருந்தமையால் சாளுக்கியர்களின் தொல்லைகளை திறமையுடன் கையாண்டு பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்தார்.

முதலாம் விக்ரமாதித்யன் பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனின் ஆட்சியின் துவக்கத்தில் பெரும் படை திரட்டிக்கொண்டு பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நோக்கி முன்னேறினான். முதலாம் விக்ரமாதித்யன் படைகள் காவிரி கரையிலுள்ள உரையூரில் பாசறை அமைத்தது.

சாளுக்கியப் படைகளை எதிர்த்து பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் ஒரு பெரிய படையைத் திரட்டினான். கி.பி.670ம் ஆண்டு விலந்தி என்ற இடத்தில் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் போர் நடைபெற்றது. சாளுக்கிய கூட்டுப்படைகளுக்கு மேலைகங்க மன்னனான பூவிக்கிரமன் தலைமைதாங்கி போரிட்டான். பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் இந்த போரில் வெற்றி பெற்றான்.

இதன் பின்னர் பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் தனது படைகளை சாளுக்கிய நாட்டைக் கைப்பற்ற அனுப்பி வைத்தான். கி.பி.674ம் ஆண்டு புருவாலனூர் என்ற இடத்தில் போர் நடந்தது. போரில் பல்லவர்கள் சாளுக்கிய படைகளை தோற்கடித்தனர். சாளுக்கிய படைகளுக்கு விக்ரமாதித்யனின் மகன் வினையாதிதன் மற்றும் பேரன் விஜயாதித்தன் ஆகியோர் தலைமைதாங்கினர். பல்லவர்களின் படைகள் சாளுக்கிய நிலத்தை ஆக்கிரமித்தன. சாளுக்கியர் ஆண்டுதோரும் பல்லவப் பேரரசிற்கு கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *