முதலாம் புலிகேசி

மன்னன் முதலாம் புலிகேசி தென்இந்தியாவை ஆண்ட புழ்பெற்ற அரச வம்சமான சாளுக்கிய அரச வம்சத்தின் முதல் மன்னன் ஆவான். மேலும் முதலாம் புலிகேசிதான் சாளுக்கிய அரச மரபை துவக்கி வைத்தவனும் ஆவான். மன்னன் முதலாம் புலிகேசி கி.பி.543ம் ஆண்டு முதல் கி.பி.566ம் ஆண்டு வரையில் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்தான். மன்னன் முதலாம் புலிகேசி வாதாபியை தலைநகராக ஆக்கிக்கொண்டான். முதலாம் புலிகேசிக்குப் பின்னர் ஆண்ட சாளுக்கிய மன்னர்கள் மேற்கு தக்காணம் முழுவதும் உள்ளடக்கியிருந்த ஒரு மிகப்பெரியப் பேரரசை ஸ்தாபித்து ஆட்சி செய்தனர். சாளுக்கிய மன்னர்கள் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆண்டனர். முதலாம் புலிகேசி கடம்ப அரச மரபினரை வெற்றிகொண்டு சாளுக்கியப் பேரரசை நிறுவினான். இவனுக்கு சத்யாச்சரியன், வல்லபன், தர்மமகாராஜன் போன்ற பட்டங்கள் இருந்தன.

சாளுக்கியர்களின் பதிவுகளில் இருந்து முதலாம் புலிகேசியின் முன்னோர்கள் பற்றி அறியமுடிகிறது. முக்கியமாக இரண்டு சிற்றரசர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஜெயசிம்ம வல்லபன் கி.பி.500ம் ஆண்டு முதல் கி.பி.520ம் ஆண்டு வரையிலும் மற்றும் அவரது மகன், ரங்கரங்கன் கி.பி.520ம் ஆண்டு முதல் கி.பி.540ம் ஆண்டு வரையிழும் சிற்றரசர்களாக ஆண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவர்கள் இருவரும் கடம்ப அரசுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும். அனல் இவர்கள் பற்றி அதிகம் அறிய இயலவில்லை.

முதலாம் புலிகேசி சிற்றரசன் ரங்கரங்கனின் மகன் ஆவான். முதலாம் புலிகேசியின் காலத்தில்தான் இவன் கடம்ப அரசிலிருந்து விடுபட்டு சுதந்திர சாளுக்கிய அரச மரபினை தோற்றுவித்தான். சாளுக்கியப் பேரரசின் உண்மையான நிறுவனர் என்ற புகழைப் பெற்றான். முதலாம் புலிகேசி வாதபி நகரைச் சாளுக்கிய நாட்டைத் தனது தலைநகராக ஆக்கிக்கொண்டான். தற்போது வாதாபி நாகரம் கர்நாடக மாநிலத்தில் பாதமி என்ற பெயரில் விளங்குகிறது. முதலாம் புலிகேசி தலைநகர் வாதாபியில் ஒரு வலுவான மலைக் கோட்டை கட்டிக்கொண்டான். இந்தப் புதிய கோட்டை ஆறுகள் மற்றும் செங்குத்தான மலைகளால் சூழப்பட்டிருந்தது.

புலிகேசியால் அசுவமேத யாகம் , இரண்யகர்பன் , அக்னிஸ்தமா , வாஜ்பேயி , பவுஷ்யுவர்ணா, பவுண்டரிகா போன்ற வேள்விகள் செய்யப்பட்டதாக, சக 565 (543 CE), .55 ஆண்டைய தனது வாதாபியின் தலைமைக் கல்வெட்டு மூலம் வழங்கப்படுகிறது அறியப்படுகிறது.

முதலாம் புலிகேசி காலத்தில் சாளுக்கிய அரசு சுதந்திர அரசாக விளங்கினாலும் சாளுக்கிய அரசின் எல்லைகள் பெரிதாக விரிவாக்கம் பெறவில்லை. முதலாம் புலிகேசி மேற்குக் கடற்கரையை சாளுக்கிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான். இதன் வாயிலாக அரபிக் கடலில் நடைபெற்ற வணிகத்தினால் சாளுக்கிய அரசுக்கு வருமானம் கிடைத்தது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *