மௌரியப் பேரரசு

மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இது இன்றைய பட்னாவுக்கு அருகில் இருந்தது. இப்பேரரசு கிமு 322 ஆம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியனால் உருவாக்கப்பட்டது.

துவக்கம்

நந்ந வம்சத்தின் இறுதி மன்னனான தன நந்தனுக்கும், பிராமணனாகிய கௌடில்யருக்குமிடையே (சாணக்கியன்) இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவினால் நந்த வம்சத்தவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. கௌடில்யர், சந்திரகுப்தனை துணையாகக் கொண்டு பாடலிபுரத்தில் ஏற்படுத்திய புரட்சியே மௌரியரது அரசாட்சிக்கு வித்திட்டது. சந்திரகுப்த மௌரியருக்குப் பின் தொடர்ந்து பல மௌரிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

ஆட்சி நிர்வாகம் மற்றும் சமயம்

வட இந்திய வரலாற்றில் மௌரியரது ஆட்சியானது முதன்முதலில் ஒரு பெரிய நிலப்பரப்பினை உள்ளடக்கிய பேராட்சியாக விளங்கிமை குறிப்பிடத்தக்கது. அசோகரோடு மௌரிய மன்னர்கள் பௌத்த சமயம் சார்ந்தவர்களாகி விட்டதால் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் போதனைகளில் முக்கியமான கருணை மற்றும் அகிம்சை பின்பற்றுவோராக விளங்கினர். இதனால் அவர்களது ஆட்சியும் அதிகம் அறநெறி சார்ந்ததாகவே அமைந்தது.

அரசன் சமுதாயத்தில் தடையில்லா அதிகாரங்களைக் கொண்டிருந்தான் அவனைத் தட்டிக் கேட்பதற்கு மக்களுக்கு உரிமையில்லை. நாட்டில் அவன் பிரத்தியேகமான உரிமைகளைப் பெற்றிருந்தான். வாரிசுகள் இல்லாத சொத்துக்களும், புதையலில் ஆறு பங்கும், நாட்டின் நிலமும் மன்னனுக்குரியவையாகும்.

மன்னனுக்கு எதிராக அமைகின்ற பல்வேறு செயற்பாடுகள் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக அமைந்தன.அரச முத்திரைகளைச் சிதைத்தல்
பொய்யான ஆவணங்களைத் தயாரித்தல்
அரசியரை இழித்தல் அல்லது வல்லுறவாட நினைத்தல்
அரசனை இழிவுபடுத்தல் நாட்டின் இரகசியத்தை பிற நாடுகளுக்கு கொடுத்தல் போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு மரணமே தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது.

மௌரியரின் ஆட்சிமுறையில் மைய ஆட்சி, மாகாண ஆட்சி என்ற இருவேறு ஆட்சி முறைகள் காணப்பட்டிருந்தன. பேரரசானது மைய மாநிலம், குஜராத் மாகாணம், வடமேற்கு மாகாணம், மேற்கு மாகாணம் எனும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அசோகர் கலிங்கத்தைப் போரில் கைப்பற்றியதன் பின்னர் கலிங்கம் ஐந்தாவது மாகாணமாக இணைந்தது. மாகாணங்களை ஆளுநர்கள் கண்காணித்தனர்.

அரசனின் செயற்பாட்டிற்கு உதவுகின்ற வகையில் அமைச்சர், புரோகிதர், சேனாதிபதி, இளவரசன் முதலானோரை உள்ளடக்கிய அமைச்சரவை செயல்பட்டது. பௌத்த சமய நிறுவனங்களைக் மேற்பார்வையிட மகாமாத்திரர் எனும் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இலக்கியம்

இலக்கியத் துறையின் வளர்ச்சியிலும் மௌரியர் காலத்திற்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந்து மத இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலும் பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பிராகிருத மொழியிலும், சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் தோன்றியிருந்தன.

இந்துமத இலக்கியங்களின் வரிசையில் மகாபாரதம் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். பதினெண் புராணங்கள் சிலவும் இக்காலத்திலேயே தோன்றின என்பர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரும் பொருளியல், அரசியல் கருத்துக்களைக் கூறும் நூலாகிய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. அது 15 அதிகாரங்களையும் 180 உப பிரிவுகளையும் 6000 பாடல்களையும் கொண்டதாய் விளங்குகின்றது. மூன்று காண்டங்களில் வகுத்து நோக்கப்படுகின்றது.

பண்டைய இந்தியாவின் வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்யும் மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதுவனால் எழுதப்பட்ட இண்டிகா எனும் நூலும் இக்காலத்து இலக்கியங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதாகும். மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியனது அரசவையில் தங்கியிருந்து பாடலிபுத்திர நகரம், அரண்மனை, மௌரியரது ஆட்சித்திறம், இந்தியாவின் வனப்பு முதலியவற்றைத் தம் நூலில் தொகுத்திருந்தார். எனினும் இந்நூல் இன்று கிடைக்கப்பெறாமை துரதிஷ்டவசமானதாகும்.

பொருளாதாரம் மற்றும் நாணயங்கள்

முதல் தடவையாக தெற்காசியாவில், அரசியல் ஒற்றுமை மற்றும் இராணுவப் பாதுகாப்பு, வர்த்தகம், விவசாய உற்பத்தி அதிகரித்தது. நூற்றுக்கணக்கான நாடுகள், பல சிறிய படைகள், சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்கள், மற்றும் உள்முரண்பாடுகளோடு கூடிய முந்தைய சூழ்நிலை மாறி, மௌரியப் பேரரசு ஒரு ஒழுக்கமான மைய அதிகாரத்திற்கு வழிவகுத்தது. பிராந்திய அரசர்களின் வரி மற்றும் பயிர் சேகரிப்பு சுமைகளை விவசாயிகள் விடுவித்தனர், மாறாக தேசிய அளவிலான நிர்வகிக்கப்பட்ட மற்றும் கடுமையான-ஆனால்-நியாயமான வரி விதிப்பு முறையின்படி “அர்த்தசாஸ்திரம்” கொள்கைகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்திரகுப்த மௌரியர் இந்தியா முழுவதிற்குமான ஒரு நாணயங் களை வெளியிட்டார்.

மாகாண ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஒரு சமூக பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வளையத்தில் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நியாயம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வருவாய் வசூலிக்கப்பட்டிருந்தாலும் கூட, மவுரியர்கள் பல பொதுப் பணிகள் மற்றும் நீர்வழிகளை மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவில் உள்வணிகம் புதியதாகக் காணப்படும் அரசியல் ஒற்றுமை மற்றும் உள்அமைதி ஆகியவற்றால் பெரிதும் விரிவடைந்து.

மௌரிய – கிரேக்க செலூக்கியப் பேரரசு நட்பு ஒப்பந்தத்தின் கீழ், மற்றும் அசோகருடைய ஆட்சியின் போது, ஒரு சர்வதேச வர்த்தக வளையம் விரிவடைந்தது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நவீன எல்லையில் கைபர் கணவாய், ஒரு பேரரசின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றது. மௌரியப் பேரரசு, துறைமுக வணிகத்தால் வெளி உலகத்துடன் உட்புகுந்தன. மேற்கு ஆசியாவில் கிரேக்க அரசுகள் மற்றும் ஹெலெனிய கால கிரேக்க இராச்சியங்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக மாறியது. தென்கிழக்கு ஆசியாவில் மலாய் தீபகற்பம் வழியாக வர்த்தகவும் நீட்டிக்கப்பட்டது. மௌரியப் பேரரசீன் ஏற்றுமதியில் பட்டு பொருட்கள், ஜவுளி, மசாலா மற்றும் கவர்ச்சியான உணவுகள் ஆகியவை அடங்கும். வெளிநாட்டு உலகம் புதிய விஞ்ஞான அறிவு மற்றும் தொழில்நுட்பம் முழுவதும் மௌரியப் பேரரசிடம் வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சாலைகள், பாசான்க் கால்வாய்கள், நீர்வழிகள், மருத்துவமனைகள், ஓய்வு இல்லங்கள் மற்றும் பிற பொதுப் பணிகள் கட்டுமானத்திற்காக அசோகர் நிதியுதவி அளித்தார். வரிவிதிப்பு மற்றும் விளைபொருள் சேகரிப்பு தொடர்பாக பல கடுமையான நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவது, பேரரசு முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க உதவியது

சமயங்கள்

சமணம்

முதுமையில் மௌரியப் பேரரசின் மணிமுடி துறந்த சந்திரகுப்த மௌரியர், சமண சமயத்தை தழுவி, பத்திரபாகு எனும் சமணத் துறவியுடன், தென்னிந்தியாவின் சரவணபெலகுளா எனுமிடத்தில் உள்ள குகையில் தங்கி, வடக்கிருத்தல் எனும் கடும் தவம் மற்றும் நோன்பு மூலம் முக்தி அடைந்தார்.

மௌரியப் பேரரசர் பிந்துசாரர் சமணத்தின் ஒரு பிரிவான ஆசீவகம் எனும் துறவற நெறியைப் பின்பற்றினார்.அசோகர் மற்றும் அவரது பேரன் சம்பிரதி பௌத்த சமயத்தை பின்பற்றினாலும், சமணத்தையும் ஆதரித்தனர்.

பௌத்தம்

மௌரியர்களின் மதம் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. முதலில் இந்து சமயத்தைப் பின்பற்றிய் அசோகர், கலிங்கப் போருக்குப் பின்னர் பௌத்ததைத் தழுவினார். மௌரியப் பேரரசு முழுவதும் பௌத்த தூபிகள் நிறுவி, பௌத்ததைப் பரப்பினார். தனது மகனையும், மகளையும் இலங்கைக்கு அனுப்பி பௌத்தம் பரவச் செய்தார். சாஞ்சி தூபி, தர்மராஜிக தூபி, மகாபோதி கோயில்களை நிறுவினார். மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் பரப்பினார்.அசோகர் ஆட்சியில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டிப்பட்டது.

புகழ் பெற்ற மௌரியப் பேரரசர்கள்

சந்திரகுப்த மௌரியர் – ஆட்சிக் காலம் கிமு 325 – 301
பிந்துசாரர் – ஆட்சிக் காலம் கி.மு 297 – 273
பேரரசர் அசோகர் – ஆட்சிக் காலம் கி.மு 273 – 232

மௌரியப் பேரரசின் வீழ்ச்சி

மௌரியப் பேரரசின் வாரிசுரிமைச் சன்டைகளாலும்; உள்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளாலும், பேரரசர் அசோகர் மறைந்த 50 ஆண்டுகளில், இறுதி மௌரியப் பேரரசர் பிரகத்திர மௌரியன் ஆட்சிக் காலத்தில் மௌரியப் பேராரசு வீழ்ச்சியுற்றது. கிமு 185ல் பிரகத்திர மௌரியன் காலத்தில் மௌரியப் பேரரசு, மகத நாட்டு அளவில் சுருங்கியது. சுங்க வம்சத்து புஷ்யமித்திர சுங்கன் எனும் படைத்தலைவரால், கிமு 180ல் கடைசி மௌரிய மன்னன் பிரகத்திர மௌரியன் கொல்லப்பட்டார்

இந்தோ கிரேக்க நாடு நிறுவப்படுதல்

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவின் வடமேற்கில் உள்ள கைபர் கணவாய் பாதுகாப்பின்றி இருந்ததால், நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா நாட்டவர்கள், கிமு 180ல் கைபர் கணவாய் வழியாக மௌரியப் பேரரசின் வடமேற்குப் பகுதிகளை கைப்பற்றி, சகலா போன்ற புதிய நகரங்களை நிறுவினர். மன்னர் மெனாண்டர் பௌத்த சமயத்தை ஆதரித்து பின்பற்றினார். இந்தோ கிரேக்க நாட்டினர், மௌரியப் பேரரசின் தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், பஞ்சாப், இராஜஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றினர்.

சாணக்கியர்

சந்திரகுப்த மௌரியர்

பிந்துசாரார்

மாமன்னர் அசோகர்

மௌரியப் பேரரசு வீழ்ச்சி

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *