சுள்ளிய சாம்பல் மந்தி (Tufted gray langur) ஒரு பழைய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை தற்போது அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ளது. இவை தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை
- இந்திய சுள்ளிய சாம்பல் மந்தி
- இலங்கை சுள்ளிய சாம்பல் மந்தி