எறும்புண்ணி

எறும்புண்ணி அல்லது அழுங்கு, அலங்கு (Anteater) என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்பு தின்னி என்று பெயராயிற்று. எறும்பு தின்னியில் எட்டு வகையான இனங்கள் உள்ளது. இலங்கை பேச்சு வழக்கில் இது அணுங்கு எனவும், சிங்களத்தில் கபல்லேவா என்றும், மலையாளத்தில் ஈனம்பேச்சி என்றும் இது அழைக்கப்படுகின்றது.


உடலமைப்பு


எறும்புண்ணியின் தலை தவிர உடலின் மற்ற அனைத்து உறுப்புகளும் கடினமான செதில்கள் போன்ற தோலால் மூடப்பட்டுள்ளன. சிறிய தலையும், நீண்ட வாலும் கொண்ட எறும்பு தின்னியின் உடல் 30 முதல் 100 செண்டி மீட்டர் நீளமுடையது. பெண் எறும்பு தின்னிகள் ஆண் எறும்பு தின்னிகளை விட சிறியவை. இவை ஆகக் கூடியது 20 ஆண்டுகள் வாழக்கூடியவை.


குணம்


ஊனுண்ணி வகையைச் சார்ந்த எறும்பு தின்னிகள் நீண்ட நாக்கு மூலம் எறும்புகளையும், பூச்சிகளையும் தூரத்தில் இருந்தவாறே பிடித்து உட்கொள்ளும். பூச்சிகளையும் எறும்புகளையும் தன் மோப்ப சக்தியின் மூலம் கண்டறியும் குணம் கொண்டவை. நிலத்தடியில் 3 முதல் 5 மீட்டர் ஆழத்தில் வாழும் எறும்பினங்களை கண்டறிந்து, தோண்டி உட்கொள்ளும். எறும்பு தின்னிகளுக்கு பார்வைத் திறன் மிகக் குறைவு. எனினும் இவற்றின் மோப்ப சக்தியாலும், கேட்கும் திறனாலும் இவை தமது உணவைக் தேடிக் கண்டறியும் குணமுடையவை. எறும்பு தின்னிகள் நன்கு நீந்தும் ஆற்றல் கொண்டவை. எதிரிகளைக் கண்டு கொண்டால், உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும் குணமுடையவை. எறும்பு தின்னியில் சில இனங்கள் மரமேறிகளாக உள்ளன.


இனப்பெருக்கம்


எறும்பு தின்னிகள் தனிமை விரும்பிகள். எனினும் இனப்பெருக்க காலங்களில், குறிப்பாக கோடை காலங்களில் மட்டும் ஒன்றுடன் ஒன்று கூடும். ஆண் எறும்பு தின்னி, பெண் எறும்பு தின்னியை விட 50 விழுக்காடு பெரியது.


வாழுமிடங்கள்


எறும்பு தின்னிகள் வெப்ப மண்டலப் பகுதிகளான ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. எறும்பு தின்னியின் கடினமான தோலுக்காக அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

வெளி இணைப்புகள்

எறும்புண்ணி – விக்கிப்பீடியா

Anteater – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *