புதர்க்காடை

புதர்க்காடை (jungle bush quail, or Perdicula asiatica) என்பது காடை இனப்பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.


விளக்கம்


இப்பறவைகளில் ஆண்பறவையின் முதுகுப்புறத்தில் சிவப்பு கலந்த தவிட்டு நிறத்திலும்,வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். மேலே கரும்புள்ளிகளும், அடிப்பாகத்தில் நெருங்கிய கருங்கோடுகள் காணப்படும். பெட்டைக் காடைகள் அடிப்புறம் இளஞ்சிவப்பு கலந்திருக்கும். இப்பறவை 6.3–7.2 இன்ச் (16–18 செமீ) நீளமும், 57–81 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.


வெளி இணைப்புகள்

புதர்க்காடை – விக்கிப்பீடியா

Jungle bush quail – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *