வரித்தலை வாத்து (Bar-headed Goose)(அன்சர் இண்டிகசு), அல்லது பட்டைத்தலை வாத்து மத்திய ஆசியாவின் மலை ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் வாத்து இனமாகும்; மிக அதிக உயரத்தில் பறந்து செல்லும் பறவையாக இது இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடலமைப்பு
மயிலை நிறமும் பழுப்பு நிறமும் கூடிய உடலும் வெண்ணிற தலையும் கழுத்தும் கொண்டு விளங்கும் வாத்து; பிடரியில் காணப்படும் இரு கரும்பட்டைகள் இதன் பெயர்க்காரணமாக அமைந்தன. ஆண் வாத்திற்கும் பெண் வாத்திற்கும் வேறுபாடு காணப்படுவதில்லை . அளவில் நடுத்தர வாத்து என்ற பிரிவிலுள்ள பட்டைத்தலை வாத்து, 71–76 செ.மீ (28–30 அங்குலம்) மொத்த நீளமும் 1.87–3.2 கிலோ கிராம் (4.1–7.1 lb) எடையும் கொண்டது.
சிறப்பியல்புகள்
சூழலியல்
இதன் வெயிற்கால வாழ்விடம் மலை ஆறுகளாகும்; அங்குள்ள சிறு புல் பூண்டுகள் இதன் உணவாகும். நடு ஆசிய நாடுகளான மங்கோலியா, கசகசுதான், கிரிகிசுதான், தசிகிசுதான், மேற்கு சீனா , இந்தியாவில் லதாக், திபெத் ஆகிய இடங்களில் பட்டைத்தலை வாத்துகள் இனப்பெருக்கம் செய்கின்றன. தமிழ்நாட்டில் கூந்தன்குளம், கோடியக்கரை போன்ற இடங்களுக்கு இந்தப் பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையை அறிவது மிகவும் கடினம் ஏனெனில், இவை 2,500,000 km2 (970,000 sq mi) மேல், தங்கள் வாழ்விடங்களைக் கொண்டுள்ளன