கருப்புக் கழுத்துக் கொக்கு (black-necked crane) என்பது ஒரு நடுத்தர அளவு கொக்கு ஆகும். இவை ஆசியாவின் திபெத் பீடபூமியில் இனச்சேர்க்கைகாக ஆண்டின் சில மாதங்களில் வந்து சேர்கின்றன. இந்தியா, பூட்டான் போன்ற நாடுகளுக்கு வலசை வருகின்றன. இது சம்மு காசுமீர் மாநிலப் பறவை ஆகும். இவை 139 செ.மீ. (55 அங்குளம்) நீளமாகவும், இறக்கை விரிந்த நிலையில் 235 செ.மீ (7.8 அடி) இருக்கும். 5.5 கிலோ (12 பவுண்ட்) எடையுள்ளதாக இருக்கும். இது பழுப்புக் கலந்த கருமையான நீண்ட கால்களும், கரிய கழுத்தும், மங்கிய சாம்பல் நிற உடலும், வாலில் தொங்கிய நிலையில் கருமையான இறகுகளும் கொண்டிருக்கும். இவை சிறுவிலங்குகள், வேர்கள், கிழங்குகள் தானியங்கள, பூச்சிகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.
About the author
Related Posts
September 23, 2021
சிவப்பு கந்திரி மாடு
September 27, 2021
மத்திய ஆசியக் காட்டுப்பன்றி
October 4, 2021