பழுப்பு புதர் பாடும் பறவை (Brown bush warbler) (லோகசுடெல்லா லுடியோவென்ட்ரிசு) என்பது பாடும் பறவை இனங்களுள் ஒன்று. முன்னர் “தொல்லுலக பாடும்பறவை” கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சிற்றினம் தற்பொழுது புதிதாக அங்கீகரிக்கப்பட்ட லோகசுடெல்லிடே குடும்பத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இது வங்காளதேசம், பூட்டான், சீனா, ஆங்காங், இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது . இதனுடைய இயற்கையான வாழ்விடம் மலையுச்சிக் காடுகளாகும். இங்கு இனப்பெருக்கம் செய்யும் இப்பறவைகள் குளிர்காலத்தில் மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல காடுகளுக்கு இடம் பெயருகின்றன.