அரக்கு உச்சிச் சிலம்பன் (chestnut-capped babbler, Timalia pileata) திமாலிடே குடும்பத்திலுள்ள ஒரு குருவியினப் பறவை. திமாலியா (Timalia) பேரினத்தில் இப்பறவை ஒன்றே உள்ளது.
பரவல்
இப்பறவை வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து, வியத்துநாம் ஆகிய நாடுகளில் இயல்பாக வாழும் பறவை.
நேபாளத்தில் உள்ள சுக்குலா பந்தா காட்டுயிர்ப் புரவகம் (Sukla Phanta Wildlife Reserve) இப்பறவை இயல்பாக வாழும் மேற்கு எல்லை.