சிறு நீல மீன்கொத்தி (Alcedo atthis) என்பது மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.
விளக்கம்
இப்பறவை சிட்டுக்குருவியைவிட சற்று பெரியது. உடலின் மேல்பாகம் நீலமும்,பச்சையும் கலந்த நிறமுடையது. அடர்த்தியான குட்டை வாலும், நீண்ட நேரானகூர் அலகும் கொண்டது. இப்பறவை கிணறு, ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளில் தனியாக கல்லின் மீதோ அல்லது தொங்கும் மரக் கிளை மீதோ அமர்ந்திருக்கும். நீருக்கு மேலே சிறகடித்து பறந்துகொண்டு திடீரென்று நீருக்குள் பாய்து இரையை கௌவிக்கொண்டு பறக்கும்.