கொண்டை வானம்பாடி என்பது வானம்பாடி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் சிலபகுதிகள், சீனா, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவையின் தலையில் உச்சியில் எழும்பியுள்ள கொண்டையின் காரணமாக இப்பெயர் பெற்றது. இதன் உடல் மேற்பாகம் வெளுத்த செம்மண் நிறத்தில் சிறிய கோடுகளுடன் இருக்கும். அடிப்பாகம் வெளுத்த வெண்நிறத்திலும், தவிட்டு கோடுகளுடன் இருக்கும்.