பாறை தகைவிலான் (Dusky Crag-Martin, Hirundo concolor) 13 செ.மீ. புகைப் பழுப்பான இதன் வால் பிற தகைவிலான்களைப் போல நீண்டிராததாக சதுரமாக இருக்கும். மேல் உடம்பை விடமார்பும் வயிறும் பழுப்புக் குறைந்து மெல்லிதான கருப்புக் கோடுகளுடன் காணப்படும்.
காணப்படும் பகுதிகள், உணவு
மலைகளில் உயர்ந்து நிற்கும் செங்குத்தான பாறைகள், கோட்டைகள், பழங்காலக் கட்டிடங்கள், அணைக்கட்டுச் சுவர்கள் ஆகியவற்றில் இணையாகவோ சிறு குழுவாகவோ அலைந்து பறந்து, பறக்கும் வண்டுகளையும் சிறகுடைய பு+ச்சிகளையும் பிடித்துத் தின்னும். பறக்கும் போதும் சுவர்கள் மீது அமர்ந்து ஓய்வு கொள்ளும் போதும் சிட், சிட்,. என மென்குரலில் கத்தும்.
இனப்பெருக்கம்
கூடு கட்டச் சேற்று மண் கிடைக்கும் பருவத்தில் சேற்றைக் கொண்டு குகைகள், தொங்கும் பாறை இடுக்குகள், பால வளைவுகள் ஆகியவற்றில் கூடமைத்து 2 முதல் 4 முட்டைகள் இடும். இமயமலைச் சாரல்களைச் சார்ந்து இனப்பெருக்கம் செய்யும் பாறைத் தகைவிலான் குளிர்காலத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளிளுக்கு வலசை வரக்காணலாம்.