வெண்தொண்டைச் சில்லை இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒரு Passeriformes குடும்பத்தை சார்ந்த சிற்றினம் ஆகும்.
பெயர்கள்
தமிழில் :வெண்தொண்டைச் சில்லை
ஆங்கிலப்பெயர் : White – throated Munia Indian silverbill
அறிவியல் பெயர் :Euodice malabarica
உடலமைப்பு
10 செ.மீ. – மண்பழுப்பான உடலைக் கொண்ட இதன் வால் கூர்மையாகக் சற்றுக் கூடுதலான பழுப்பு நிறங்கொண்டது. பிட்டம் வெள்ளை நிறம், மார்பும், வயிறும் வெளிர் மஞ்சள் தோய்ந்த வெண்மை.
உணவு
50 வரையான குழுவாகப் புல்நிலங்கள், கள்ளி வேலிகள் ஆகியவற்றில் எறுப்பு, இரையாகக் கொள்வதோடு சோளம், நெல், புல்பூண்டின் விதைகள் ஆகியவற்றையும் உணவாக கொள்கின்றது. சிப் எனவும் சிர்ப் எனவும் குரல் கொடுக்கும்.
இனப்பெருக்கம்
டிசம்பர் முதல் மே முடிய புல்லால் பந்து வடிவில் சிறிய குழாய் அமைப்புடைய பக்கவாயிலோடு கூடு அமைத்து 4 முதல் 8 முட்டைகள் இடும். பறவைகளின் தூவிகளால் கூட்டை மெத்தென்று ஆக்கும். பருத்தி பயிராகும் பகுதிகளில் பஞ்சினைப் பயன்படுத்தும் கூடு தரையிலிருந்து 2 முதல் 3மீ உயரத்தில் இலந்தை, கருவேல், துரட்டி, சதுரக் கள்ளி முதலிய முள்ளோடு கூடிய புதர்களில் அமைந்திருக்கும்.