வானவில் அலகுத் தூக்கான், கந்தக மார்புத் தூக்கான் அல்லது அடித்தட்டை அலகுத் தூக்கான் (Ramphastos sulfuratus) என்பது தூக்கான் குடும்பத்தைச் சேர்ந்த இலத்தீன் அமெரிக்கா அங்கத்துவ வண்ணமயமான ஒரு பறவையாகும். இது பெலீசு நாட்டின் தேசியப்பறவையுமாகும். தூக்கான் அல்லது பேரலகுப் பறவை என்று இதனைக் குறிப்பிடுவர்.
இப்பறவை பற்றிய செய்திகள்
இது தன் அலகுடன் சேர்ந்து நீளம் கிட்டத்தட்ட 42 முதல் 55 cm (17 முதல் 22 in) வரை காணப்படும். இவற்றின் பெரிய வண்ணமான அலகு சராசரி சுமார் 12–15 cm (4.7–5.9 in) நீளமாக, இதன் மொத்த நீளத்தில் மூன்றில் ஒருபங்காகக் காணப்படும். இதன் நிறை சுமார் 380–500 g (13–18 oz) காணப்படும். இந்தப் பறவை பழவகைகளை மட்டுமே தின்னும். இதன் ஒலி தவளை கத்துவது போல இருக்ககும்.