லகர் ஃபால்கன் (laggar falcon (Falco jugger) என்பது நடுத்தர உடல் அளவு கொண்ட கொன்றுண்ணிப் பறவை இனத்தைச் சார்ந்த பறவை ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஈரான், தென்கிழக்கு ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம் , வடமேற்கு மியான்மர் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியா முழுக்கக் காணப்பட்ட இப்பறவை தற்போது மிகவும் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இவை மதுரை மாவட்டம் அரிட்டா பட்டி மலைப்பகுதியில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது லாங்கர் பால்கான் பறவையை ஒத்திருக்கிறது ஆனால், இதன் உடல் இருண்ட, மற்றும் கருமையான “கால் இறகுகளைக்” கொண்டதாக உள்ளது. ஒரு வயதுகொண்ட பறவைகள் வயிற்றுப் பகுதிகள் மிகவும் இருண்டதாக இருக்கும். இந்த இனப்பறவைகள் வல்லூறுகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டவை.