நெடுவாற் பராடிகல்லா (Paradigalla carunculata) என்பது நடுத்தர அளவிலான, அதாவது 37 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினங்களைச் சேர்ந்த கரிய பறவையினம் ஒன்றாகும். இதன் வால் நீண்டு கூரியதாக இருக்கும். தனித்த நிறமாயுள்ள ஒரு சில சந்திரவாசிப் பறவையினங்களில் ஒன்றான இது பன்னிற அமைப்பைக் கொண்டிருப்பது இதன் சொண்டுக்குக் கீழே மஞ்சள், சிவப்பு மற்றும் இளம் நீல நிறத்திலான தொங்கு சதையிலாகும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவை ஒப்பீட்டளவிற் சிறியதாயும் நிறம் மங்கியதாயும் காணப்படும்.
சந்திரவாசிப் பறவைக் குடும்பத்தில் மிகக் குறைவாகவே அறியப்பட்டதான நெடுவாற் பராடிகல்லா இனம் இந்தோனேசியாவின் மேலைப் பப்புவா மாநிலத்தில் அருஃபாக் மலைகளுக்குத் தனிச்சிறப்பானதாகும்.