மலை தையல்சிட்டு (Mountain tailorbird) (பைலெர்கேட்சு ககுலேட்டசு) என்பது பாடும் பறவைகளுள் ஓர் இனமாகும். முன்னர் இவை தொல்லுலக பாடும் பறவை” எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது பைலெர்கேட்சு பேரினத்தில் செட்டிடே குடும்பத்தில் வகைப்படுத்தப்படுகிறது.
இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. அதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகளாகும் .