வர்ண சுண்டங்கோழி (Painted Spurfowl), பாறைப்பகுதிகளிலும் சமதள நிலப்பகுதிகளிலும் காணப்படும் ஒரு பறவையாகும். இதன் குடும்ப பெயர் பெசென்சு (pheasant) என்பதாகும். இவை தீபகற்ப இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றின் ஆண் இனம் பல நிறத்துடன் பிரகாச வெள்ளை நிறம் கொண்டு காணப்படுகிறது. இப்பறவையில் ஆண் பறவையின் கால்பகுதியில் நான்கு குதிமுள்ளும் பெண் பறவையின் கால்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு குதிமுள்ளும் கொண்டு காணப்படுகிறது. இப்பறவையையும் சுண்டங்கோழியையும் அதிகமாக ஒன்றாக காடுகளில் பார்க்கலாம். புதர்களுக்கடியில் இரண்டு அல்லது அதற்கும் மேலும் கூட்டமாக காணப்படுகிறது.
இதன் கண் பகுதி சிவந்தும் காதுப்பகுதி மறைந்தும் காணப்படுகிறது. சாம்பல் நிறத்தில் உடல் கொண்டிருந்தாலும் பல வர்ணம் கொண்டதாக காணப்படுகிறது. இவற்றின் வால்பகுதி சில நேரங்களில் மேல் நோக்கி காணப்படுகிறது.
இந்தியாவில் ராசஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடர் பகுதி, மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியான பச்மர்கி (Pachmarhi) போன்ற இடங்களிலும் இவை அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் ஆந்திரப்பிரதேசம், தென்னிந்தியப்பகுதி போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.