பழனிச் சிரிப்பான் (ஆங்கிலப் பெயர்: Palani laughingthrush, உயிரியல் பெயர்: Montecincla fairbanki) என்பது ஒரு வகைச் சிரிப்பான் ஆகும். இது பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றொரு சிரிப்பானான அசம்புச் சிரிப்பான் அச்சன்கோயில் ஆற்றுக்குத் தெற்கே காணப்படுகிறது.
வகைப்படுத்தல்
இது கொடைக்கானலில் சாமுவேல் பேகன் பேர்பேங் என்பவரால் பெறப்பட்ட ஒரு மாதிரியை வைத்து வகைப்படுத்தப்பட்டது.