மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, Pelargopsis capensis) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.
இது பெரிய மீன்கொத்தியும், 35 முதல் 38 cm (14 முதல் 15 in) நீளம் உடையதும் ஆகும்.
இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.