வரித் தூக்கணம் [Streaked Weaver(Ploceus manyar)] அல்லது கருங்கீற்றுத் தூக்கணம் என்பது பிளோசடே (Ploceidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாங்குருவி இனம் ஆகும். இந்த P. manyar இனம் நான்கு உள்ளினங்களைக் கொண்டுள்ளது.
உடலமைப்பும் கள அடையாளங்களும்
பெருமளவில் காணப்படும் உள்ளினமான P. manyar flaviceps: சிட்டுக்குருவியை விட சற்று சிறியது (நீளம் = 15 cm). வளர்ந்த ஆண்: உச்சந்தலை அடர்மஞ்சள் நிறம், அதன் கீழே கருங்கபில நிறம். வெண்ணிற அடிப்பகுதியில் கரும்பழுப்புக் கீற்றுகள்
பரவல்
கருங்கீற்றுத் தூக்கணாங்குருவிகள் இந்தியத் துணைக்கண்டம் (மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகள் நீங்கலாக), ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இவை காணப்படுகின்றன.