காசிமலைப் பழுப்புச் சிலம்பன் (tawny-breasted wren-babbler, இசுபெலோர்னிசு லாங்கிகாடேடசு = Spelaeornis longicaudatus), வடகிழக்கு இந்தியாவில் காசி மலை பகுதியில் மட்டும் காணப்படும் சிறிய பறவை. இது திமாலிடே (Timaliidae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இதனை ஆங்கிலத்தில் பொதுவாக tawny-breasted wren-babbler என்றழைக்கின்றார்கள்.
ஈரம் மிகுந்த வெப்பமண்டலக் காட்டு வாழிடப் பகுதிகள் அழிவுறுவதால், இப்பறவையினமும் அழிவாய்ப்பு இனமாகக் கருதப்படுகின்றது.