டான்சிக் ஹைஃப்ளையர் புறா (Danzig Highflyer pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. டான்சிக் ஹைஃப்ளையர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பறத்தல் மற்றும் கண்காட்சி என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வரலாறு
இவை 1807ல் டான்சிக் பகுதியில் உருவானதாகக் கருதப்படுகிறது. போலந்தில் உள்ள கலிசியா பகுதியில் உருவானதாகவும் சொல்லப்படுவது உண்டு.