வெண்மார்புச் சிரிப்பான் அல்லது சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey-breasted laughingthrush) என்றழைக்கப்பட்டது இப்போது இரண்டு சிற்றினங்களாக பிரிக்கப்பட்டு பழனி சிரிப்பான் (Montecincla fairbanki) மற்றும் அசம்பு சிரிப்பான் (Montecincla meridionalis) என்றழைக்கபடுகிறது.
பெயர்கள்
தமிழில் :வெண்மார்புச் சிரிப்பான்
ஆங்கிலப்பெயர் :Grey-breasted Laughingthrush
அறிவியல் பெயர் :Montecincla meridionale
உடலமைப்பு
20 செ.மீ. – சிலேட் பழுப்பு நிறத்தலையும் ஆலிவ் பழுப்பு நிற உடலும் கொண்டது. தொண்டை, கன்னம், மார்பு ஆகியன சாம்பல் நிறம், வயிறு வெளிர் சிவப்பு.
காணப்படும் பகுதிகள்
நீலகிரி, கொடைக்கானல், ஆனைமலை சார்ந்த மலைப் பகுதிகளில் பசுமைமாறாக் காடுகளையும் மலைவாசிகள் குடியிருப்புகளையும் அடுத்துக் காணலாம். 6 முதல் 12 வரையான குழுவாகப் காணப்படும்.
உணவு
6 முதல் 12 வரையான குழுவாகப் புதர்களிடையே தாவித் திரிந்து புழபூச்சிகள், சிறுகனிகள் முதலியனவற்றை இரையாகத் தேடித் தின்னும்.
இனப்பெருக்கம்
அச்சம் ஏற்பட்டால் பதுங்கி ஒளிந்து கொள்ளும். உரக்கச் சீழ்க்கை ஒலி எழுப்பியும் குழு முழுதும் ஒன்றாகச் சிரிப்பது போல கலகலத்தும் மாங்குயில் போல இனிய குரலில் கூவியும் தனது இருப்பை அறிவிக்கும். ஓடிப் புதர்களிடையே மறையும் போது விட்-விட்-விட் என சிறு குரலெழுப்பும். டிசம்பர் முதல் ஜூன் வரை தனித்து நிற்கும் புதர்களிடையே வெளியே தெரியாதபடி மறைவாகப் கோப்பை வடிவிலான கூடமைத்து 2 முட்டைகள் இடும்.