பனிப் புறா, பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. பனிப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் கி.பி.1856ல் பனிப் புறாக்களை வளர்த்தார்.
வடிவமைப்பு
இவை நீலநிற பனிக்கட்டி போன்ற வண்ணத்தில் காணப்படுகின்றன. இவை முதன்முதலில் ஜெர்மனி மற்றும் போலந்தில் வளர்க்கப்பட்டன. இவை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்றவையல்ல என்று குறிப்பிடப்படுகின்றன.