கோமன் கரணப் புறா பொதுவாக கோமோர்னெர், சுலோவாகியத்தில் Komárňanský kotrmeliak , அங்கேரியம்: Komáromi bukó, ஒரு ஆடம்பரப் புறா வகையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வகை என்று உரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கரணமடிப்பதற்காக வளர்க்கப்பட இவை தற்போது கண்காட்சிகளுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
தோற்றம்
இவை 18-19ம் நூற்றாண்டில் ஆஸ்திரியப் பேரரசில் இருந்த கோமர்னோ நகரில் (தற்கால சுலோவாகிய-ஹங்கேரி எல்லையில்) உருவாக்கப்பட்டன. இவற்றின் முன்னோர் உதுமானியத் துருக்கியரால் உதுமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவை அமெரிக்காவிற்கு இலினாய்ஸைச் ஜான் ஆஸ்டலோஸ் மற்றும் பீட்டர் மோடோலாவால் 1920ல் இறக்குமதி செய்யப்பட்டன. அமெரிக்க கோமோர்னெர் சங்கம் 1946ல் ஆரம்பிக்கப்பட்டது.
கோமோர்னெர்கள் சிறிய, மெல்லிய புறாக்களாகும். ஹோமிங் புறாக்களை விட மிகவும் சிறிய மற்றும் மென்மையானவையாகும். இவை பொதுவாக மேக்பை வண்ண வடிவத்தில் கருப்பு, நீளம், சிவப்பு, வெள்ளி, மஞ்சள் மற்றும் சாம்பல்-சிவப்பு நிறத்தில் உள்ளன. இவை திட நிறங்களிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. தலையானது இரு காதுகளிலிருந்தும் தொடங்கி ரோசெட்டாவில் முடியும் கொண்டையைக் கொண்டுள்ளது.