இலாகூர் புறா (Lahore pigeon) ஆடம்பரப் புறாவின் ஒரு வகையாகும். இவை உடல் அளவிற்காகவும், அமைதியான குணத்திற்காகவும் அறியப்படுகின்றன. இவை அனைத்தும் மாடப்புறாவிலிருந்து உருவானவையாகும்.
தோற்றம்
பல ஆண்டுகளாக இவை பாகிஸ்தானின் இலாகூர் பகுதியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை கி.பி. 1880 களில் ஜெர்மானியர்களால் இறக்குமதி செய்யப்பட்டு கி.பி. 1960 களில் பிரபலமாயின. ஈரான், பெர்சியா முன்னர் இறைச்சிக்காகவும் தற்போது இதன் தோற்றப் பொழிவிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
உடலமைப்பு
இவற்றின் உயரம் சுமாராக 10.5 அங்குலமும், நீளம் சுமார் 11.5 அங்குலமும் இருக்கும். இவற்றின் தோள்பட்டை அகலம் சுமார் 5.5 அங்குலமாகும்.