நீளக்கால் உள்ளான் (Long-toed stint — Calidris subminuta), என்பது ஒரு சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான kalidris அல்லது skalidris என்ற சொல்லில் இருந்தும் இனப்பெயர் லத்தீன் சொல்லான subminuta என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது, எனவே Calidris minuta.
இது வட ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் வலசை செல்லும்.
உடலமைப்பு தோற்றம்
நீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி.