பெயர்கள்
தமிழில் :சிறிய தவிட்டுப் புறா சிரிக்கும் புறா
ஆங்கிலப்பெயர் :Little Brown Dove
அறிவியல் பெயர் :Streptopelia senegalensis
உடலமைப்பு
27 செ.மீ. – வெளிர் சிவப்புத் தோய்ந்த பழுப்பும், சாம்பல் நிறமான உடலைக் கொண்டது. கழுத்தின் பக்கங்களில் கருப்பும் செம்பழுப்புமான கட்ட அமைப்புக் கொண்டது. மார்பு இளஞ் சிவப்புத் தோய்ந்த பழுப்பாகவும், வயிறு வெண்மையாகவும் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்
தமிழகமெங்கும் திருகுகள்ளி, சப்பாத்திக்கள்ளி ஆகியன வேலியாகவும் புதராகவும் வளர்ந்திருக்கும் விவசாய நிலங்களைச் சார்ந்து பிற புறாக்களோடு சேர்ந்து திரியும்.
உணவு
அறுவடையான நிலங்களில் தானியங்களையும் புல் பூண்டின் விதைகளையும் இளந்தளிர்களையும் உணவாகத் தேடித் தின்னும் கூரூரூ.. கூரூஉஉ என்றோ குரு ரூ ரூ என்றோ குரல் கொடுக்கும்.
இனப்பெருக்கம்
ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்வது உண்டெனினும் சிறப்பான பருவம் ஜனவரி முதல் அக்டோபர் வரை கள்ளிப்புதர்களில் குச்சிகள், இலைதடைகளைக் கொண்டு தட்டமைப்பில் கூடு வைத்து 2 முட்டைகள் இடும்.