கருஞ்சிவப்பு மரங்கொத்தி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Micropternus brachyurus) என்பது இந்தியாவில் கிழக்கு வடக்கு மற்றும் தென் இந்தியாவில் காணப்படும் ஒரு மரங்கொத்தி பறவை வகையாகும். ஆகும். மேலும் இது நேபாளம், பூட்டான், மியான்மார், தென் சீனம், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர்,வியட்நாம், இந்தோனேசியா, புரூணை, போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
உடலமைப்பு
25 செ.மீ. – மற்ற மரங்கொத்திகளிலிருந்து வேறுபட்டதாக செம்பழுப்பு உடல் கொண்டதாக இருப்பது கொண்டு இதனை எளிதில் அடையாளம் காணலாம்.
காணப்படும் பகுதிகள் ,உணவு
மேற்கு தொடர்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்து மூங்கில் காடுகள் இடையிடையே விரவிய ஈரப்பதம் மிகுந்த காடுகளில் காணலாம். மரங்களில் இலைகளிடையே கூடுகட்டும் செவ்வெறும்பு முதலான எறும்புகளே இதன் உணவாக அமைவதால் அத்தகைய கூடுகள் உள்ள மரங்களில் இதனைக்காண மிகுந்த வாய்ப்பு பழவகைகளை உண்பதோடு வாழை இலையின் தண்டின் அடிப்பாகத்தைத் துளைத்துளச் சாற்றினையும் உறிஞ்சும். கினிக்-கினீக் கினீக் என மும்முறை குரல் கொடுக்கும். மரக்கிளைகளிலும் மூங்கில்களிலும் இனப் பெருக்க காலம் நெருங்கும் சமயத்தில் அலகால் தட்டி ஒலி எழுப்பும் பழக்கம் உடையது. மெல்ல முதலில் தொடங்கப்படும் தட்டல் படிப்படியே சத்தம் கூடி கால் கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படியானதாக உயரும்.
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான பருவத்தில் மரத்தில் இலைக்கொத்துகளாலான தொங்கும் எறும்புக் கூட்டைத் துளைத்துக் கருப்பு நிறக் கூழ்போன்ற பொருளால் கூடமைத்து 2 முட்டைகளிடும்.