மூலவர்:
காலீசுவரர்
அம்மன்/தாயார்:
சிவகாமசுந்தரி
தல விருட்சம்:
முக்களாமரம்
தீர்த்தம்:
திருக்குளம்
ஊர்:
சீட்டஞ்சேரி
மாவட்டம்:
காஞ்சிபுரம்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம்
தல சிறப்பு:
இங்கு காலீசுவரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் சீட்டஞ்சேரி, காஞ்சிபுரம்.
பொது தகவல்:
கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை அலங்கரிக்க, கோமுகம் அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். கணபதி, வள்ளி-தேவயானையுடன் கூடிய முருகன் சன்னிதிகளோடு அதிகார நந்தி, அறுபத்துமூவர், நவகிரகங்கள், பைரவர், சூரிய சந்திரர் திருமேனிகள் மற்றும் கண்ணாடிப் பள்ளியறை அமைந்திருக்கிறது.
பிரார்த்தனை
குடும்பம் செழிக்கவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கண்ணபிரான் வழிபட்ட காலீசுவரர்:
கண்ணபிரானுக்கு ஆவினங்கள் மீது அலாதி அன்பு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! சீட்டணஞ்சேரியில் எழுந்தருளியுள்ள திருக்காலீசுவரரை கண்ணபிரானும் தரிசித்து வழிபட்டுள்ளார் என்கிறது தலவரலாறு. காளை ஈசுவரர் என்பதே பிற்காலத்தில் காலீசுவரர் என்றும் மருவியிருக்கலாம். கண்ணன் மட்டுமல்ல, பரத்வாஜ முனிவரோடு, பாண்டவர் ஐவரும் காலீசுவரை வணங்கி வழிபட்டுள்ளனர். கிருஷ்ணபுரம் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு.
மணிபுங்கமரத்தின் அடியில்:
மிகவும் அரிதான மணிபுங்க மரத்தடியில் சுயம்புலிங்கமாய் எழுந்தவரே இந்த காலீசுவரர். முக்காளமரம் மூன்று இலைகளோடு செழிப்பாக கம்பீரமாக நிற்கிறது. மிகப்பெரிய பிராகாரம், ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் விண்ணைத் தொட்டிட, ஒரே நேர்கோட்டில் அமைந்த இரண்டு கொடி மரங்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னதிகளுக்கு எதிரே தனித்தனியே கொடி மரங்கள் அமைந்திருப்பது, ஒரு சில திருக்கோயில்களில் மட்டுமே! கொடிமரத்தின் அருகில் பச்சைக்கல் நந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். எட்டடி உயரம் கொண்ட துவாரபாலகர் இருபுறமும் கம்பீரமாக நிற்க, சன்னதியை நோக்கி உள் சுற்றில் விரைகிறோம். காசிவிசுவநாதரைப் போன்ற சிறிய சிவலிங்கத் திருமேனியராய் திருக்காலீசுவரர் கருவறையில் எழுந்தருளியுள்ளார். அன்னையின் திருநாமம் சிவகாமசுந்தரி
மண்டபங்கள்:
மகாமண்டபம், உற்சவமண்டபம், ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம், யாகசாலை மண்டபம், அர்த்தமண்டபம், சிறிய தான மண்டபம் என்று திருக்கோயில் அமைப்பின் அத்தனை அம்சங்களும் கொண்டதாய் திருக்கோயில் அமைந்துள்ளது. வெளிச்சுற்றில் திருக்குளம் நிறையப் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
தல வரலாறு:
யாதவ குலத்தைச் சேர்ந்த மூவர், சீட்டண்ணன், குரும்பண்ணன், சாத்தண்ணன் ஆகியோர், தங்கள் பசுக்கூட்டங்களோடு இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அந்த இடங்களே சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தண்ணஞ்சேரி என்று வழங்கலாயின. மணிபுங்க மரத்தினடியில் பசுக்கூட்டம் ஒன்று, சிவலிங்கத் திருமேனிமீது பாலைப் பொழிந்து வருவதை மிளகு, கிராம்பு சுமையுடன் இவ்வழியே வந்த வியாபாரி ஒருவர் கண்டு அதிசயித்தாராம். அவர் கனவிலும் ஈசன் தோன்றி ஆலயம் அமைக்கப் பணித்தாராம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு காலீசுவரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.