மூலவர்:
சொக்கநாதர்
அம்மன்/தாயார்:
மீனாட்சி
தல விருட்சம்:
வில்வம்
ஊர்:
ராமநாதபுரம்
மாவட்டம்:
ராமநாதபுரம்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பவுர்ணமி, பிரதோஷம். சித்திரை திருவிழா, அஷ்டமி
தல சிறப்பு:
கோயிலில் ஒரே இடத்தில் 15 வில்வ மரம் ஒன்றாக வளர்ந்திருப்பதும், யோக லட்சுமி அம்மனுக்கு தனி சன்னதி இருப்பதும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்(பெரிய கோயில்)சன்னதி தெரு, ராமநாதபுரம்-623 501.
போன்:
+91 4567 223548, 9942319434
பொது தகவல்:
கிழக்கு நோக்கி அமைந்த கோயில். கோயிலின் மேலே சாலக்கோபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் சுதை வடிவில் உள்ளது. கோயில் நுழைவாயிலில் இடது புறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். உள்ளே நுழைந்ததும் பெரிய கொடிமரம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சண்டிகேஸ்வரர், சரஸ்வதி, முருகன், லிங்கோத்பவர், நவகிரகங்கள், நந்திக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளது. சனிபகவான், சூரியன், சந்திரன் மற்றும் பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. துர்க்கை சன்னதி அருகில் யோக லட்சுமி அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணம் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி ஞானம் பெறவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஒரே இடத்தில் சிவன் மற்றும் பெருமாளுக்கு சன்னதி அமைந்துள்ளது. இக்கோயில் மதுரை சிம்மக்கல் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் அமைப்பை போன்று உள்ளது சிறப்பு.
தல வரலாறு:
ராமநாதரபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் மதுரை சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் ஆதி சொக்கநாதர் கோயிலில் வழிபாடு செய்துவந்தார், ஒருமுறை அவர் அங்கு சென்று வணங்க முடியாமல் வருந்தினார், அப்பொழுது சிவ பெருமான் அவர் கனவில் தோன்றி இவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபடும்படி அருளினார். அதன்படி இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
கோயிலில் ஒரே இடத்தில் 15 வில்வ மரம் ஒன்றாக வளர்ந்திருப்பது சிறப்பு.