அருள்மிகு ஆளுடையார் திருக்கோயில்
மூலவர்:
ஆளுடையார்
ஊர்:
உய்யக்கொண்டான் திருமலை
மாவட்டம்:
திருச்சி
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி, சோம வாரங்கள், கடைசி சோம வாரத்தின்போது சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:
கருவறையில் இறைவன் ஆளுடையார், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவரது திருமேனி எட்டரை அடி உயரத்தில், பிரம்மாண்டமாக, அழகிய திருக்கோலத்துடன் அமைந்திருப்பதும் அம்மன் சன்னதி இல்லாத சிவாலயம் என்பதும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆளுடையார் திருக்கோயில் உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி மாவட்டம்.
பொது தகவல்:
இறைவனின் தேவகோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் பெருமாளும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வர சன்னதி உள்ளது. மேலும் ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதிகளும் உள்ளன.முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம், நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும் உள்ளது.
பிரார்த்தனை
திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பேச்சு வராத குழந்தைகள் விரைவில் பேசவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பெண்கள் நந்தியம் பெருமானின் அருகே தொட்டில் கட்டியும், மணி கட்டியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
மலையை செதுக்கி உயரமான இடத்தில் மலை மேல் அமைக்கப்பட்டுள்ளது ஆலயம்.
தல வரலாறு:
ராவணனின் சகோதர முறை உறவினனான கரன். தவம் செய்வதற்காக ஒரு சிவன் கோயிலைக் கட்டத் திட்டமிட்டான். ராவணனின் தந்தையான விச்சிரவசுவுக்கும் சாகை என்பவளுக்கும் பிறந்த மூன்று புதல்வர்களுள் மூத்தவன் இவன். இவனது சகோதரர்கள் தூஷணன், திரிசரன் என்பவர்கள். கரன், திரிசரனின் சேனாதிபதியாய் இருந்தான். திரிசரன் திருச்சியை அரசாண்ட போது உய்யக்கொண்டான் திருமலையில் கரன் ஒரு சிவன் கோயிலைக் கட்டிமுடித்தான். அதுவே ஆளுடையார் திருக்கோயில்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
கருவறையில் இறைவன் ஆளுடையார், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவரது திருமேனி எட்டரை அடி உயரத்தில், பிரம்மாண்டமாக, அழகிய திருக்கோலத்துடன் அமைந்திருப்பது சிறப்பு.