பேட்டைவாய்த்தலை மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில்

மூலவர்:


மத்தியார்ஜுனேஸ்வரர்


அம்மன்/தாயார்:

பாலாம்பிகை


ஊர்:

பேட்டைவாய்த்தலை


மாவட்டம்:

திருச்சி


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி


தல சிறப்பு:

உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டும் வித்தியாசமான வழக்கம் உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மத்தியார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் பேட்டைவாய்த்தலை, திருச்சி மாவட்டம்.


போன்:

+91 431- 261 2442, 97880 66312


பொது தகவல்:

வடக்கே ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜுனமான ஸ்ரீசைலம், தெற்கே நெல்லை மாவட்டத்தில் உள்ள திருப்புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் ஆகியவற்றுக்கு இடையே இத்தலம் இருப்பதால் மத்தியார்ஜூனேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகியதால் கோயில் மண்டபத்தூணில் பிரம்மஹத்தி சிற்பம் பொறிக்கப்பட்டது. பெண்களுக்கு சித்த வைத்தியம் செய்த பொற்றாளம் பூவாய் சித்தர் வடிவம் ஒரு தூணில் இருக்கிறது. இந்த இரண்டு சிற்பங்களுக்கும் தினமும் பூஜை செய்யப்படுகிறது.


பிரார்த்தனை


மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறு உள்ள பெண்கள் தங்கள் பிரச்னை தீர இங்குள்ள மத்தியார்ஜுனேஸ்வரரை வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சீட்டு எழுதி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

சித்தருக்கு பிரார்த்தனை சீட்டு:

ஒரு சமயம், பொற்றாளம் பூவாய் சித்தர் வைத்தியம் பார்த்தும் பெண்களுக்கு உடல் உபாதை நீங்கவில்லை. இதனால் அவர் பாலாம்பிகையிடம் வேண்டினார். அம்பாளின் கருணையால் நோய்கள் நீங்கின. பூப்படைதல் பிரச்னை, மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க பாலாம்பிகையை எண்ணி விரதம் இருக்க வேண்டும், என்று சித்தர் அருள்வாக்கு கூறினார். பெண்களும் விரதம் இருந்து நோய்களை தீர்த்துக் கொண்டனர். தற்போது, உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டுகின்றனர். இவ்வாறு செய்பவர்களுக்கு,


பாலாம்பிகேச வைத்யேச


பவரோக ஹரேதிச!


ஜபேந் நாமத்ரயம் நித்யம்


மஹாரோக நிவாரணம்!!


என்ற மந்திரம் 11 வாரங்கள் வீட்டில் திருவிளக்கு முன்பு படிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கான பிரச்னைகள் நிவர்த்தியாவதாக நம்பிக்கையுள்ளது.


தல வரலாறு:

சோழ மன்னர்கள் நடத்திய போரில் ஏற்பட்ட உயிர் சேதத்தால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதுநீங்க தஞ்சாவூர் அருகிலுள்ள திருவிடைமருதூரில் சிவாலயம் கட்டினர். ஆனால், தோஷம் முழுமையாக நீங்கவில்லை. ஒருமுறை மூன்றாம் குலோத்துங்க சோழனின் கனவில் தோன்றிய சிவன், ஆறு (தீர்த்தம்) வெட்டி, அதன் கரையில் சிவாலயம் கட்டினால் தோஷம் விலகும், என்றார். மன்னனும், காவிரியின் கிளை ஆறாக, உய்யக்கொண்டான் ஆற்றை வெட்டி அதன் தென்கரையில் சிவாலயம் கட்டினான். தன்னுடைய முன்னோர் திருவிடைமருதூர் கோயில் தெய்வங்களுக்கு சூட்டிய பெயர்களை இங்கேயும் சூட்டினார். சுவாமிக்கு மத்யார்ஜூனேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாலாம்பிகை என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து தோஷம் நீங்கியதுடன், நீண்ட நாளாக குழந்தை இல்லாத அவனுக்கு புத்திரபாக்கியமும் கிடைத்தது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டும் வித்தியாசமான வழக்கம் உள்ளது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *